Home/பட்டிமன்றம்
தமிழ்த் துறையின் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரம் பெற்ற இந்தியாவில் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்கள் ஆண்களா? பெண்களா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் 13.08.2024 அன்று நடைபெற்றது. இதில் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்கள் ஆண்களே என்ற தலைப்பில் திருமதி பிரியதர்ஷினி(உதவிபேராசிரியர், தமிழ்த் துறை) அணியினறும் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்கள் பெண்களே என்ற தலைப்பில் திருமதி மோகனப்பிரியா (துறைத் தலைவர், கணிதத் துறை) அணியினரும் பல கருத்துக்களை முன் வைத்தனர். சிறப்பு விருந்தினரும் பட்டிமன்ற நடுவருமான முனைவர் G.வசந்தி மாலா, பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறைத்தலைவர், பூ சா. கோ கலை அறிவியல் கல்லூரி அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை பற்றிய விளக்கங்களையும், இரு அணியினரின் கருத்துக்களையும் கோர்வைப்படுத்தி கூறினார். இறுதியில் சுதந்திர இந்தியாவில் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்கள் ஆண்களே என்று தீர்ப்பு வழங்கினார்.
©2024 Mjccas. All rights reserved | Design and Developed by Trioticz